மகள் முகம் என்னைப்போல இல்லை., நீ எவன் கூடல்லாம்..! மகளுக்கு தந்தையால் நேர்ந்த பயங்கரம்., அழுகிய நிலையில் சடலம்..!! தமிழகமே பேரதிர்ச்சி.!!



madurai-jaihindpuram-man-killed-8-age-daughter

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட தந்தை, 8 வயது மகளை கொலை செய்து தலைமறைவான பயங்கரம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரம் பகுதியில் வசித்து வருபவர் காளிமுத்து. இவரின் மனைவி பிரியதர்ஷினி. தம்பதிக்கு 8 வயதுடைய தர்ஷினி என்ற மகள் இருக்கிறார். பிரியா பத்திரக்கடையில் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 8-ம் தேதி காளிமுத்து மகளுடன் சிவகங்கையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதாக புறப்பட்டார். 

பின்னர், 2 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் இல்லாத நிலையில், பிரியதர்ஷினி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலில் காவல் துறையினர் புகாரை ஏற்றுக்கொண்டு எவ்வித விசாரணையும் நடத்தவில்லை. இந்நிலையில், நேற்று பிரியா வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  

தகவல் அறிந்ததும் வந்த அதிகாரிகள், வீட்டின் உள்ளே பரணில் இருந்த பெரிய வாளியில் சிறுமி பிரியதர்ஷினியின் உடலை அழுகிய நிலையில் மீட்டனர். அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய காவல் துறையினர், பிரியதர்ஷினியிடம் விசாரணை நடத்துகையில் காளிமுத்துவின் சந்திக்க எண்ணம் தெரியவந்தது.

madurai

திருமணம் ஆன நாள் முதலே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட காளிமுத்து, மனைவி வேலைக்கு சென்று வரும் நேரத்தில் செல்போனை வாங்கி பார்த்து யார் யாருடன் பேசி வந்தாய்? என தொந்தரவு செய்துள்ளார். மேலும், மகளின் முகஜாடை தன்னைப்போல இல்லை என்று கூறி மகளையும் அடித்து சித்ரவதை செய்துள்ளார். 

இப்படியான தருணத்தில் மகளை கொலை செய்த காளிமுத்து, பரணில் உள்ள வாளியில் அவரின் உடலை போட்டு தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, தனிப்படை காவல் துறையினர் காளிமுத்துவை தேடி வருகின்றனர். மேலும், சில நாட்களாகவே துர்நாற்றம் வீசிய சமயத்தில், எலி இறந்து இருக்கலாம் என்று பிரியதர்ஷினியும் அலட்சியமாக இருந்துள்ளார்.