திருமணம் முடிந்த அந்த விஷயத்திற்கு தகராறு.. மனைவியை கொலை செய்த கணவன் பரபரப்பு வாக்குமூலம்.!

திருமணம் முடிந்த அந்த விஷயத்திற்கு தகராறு.. மனைவியை கொலை செய்த கணவன் பரபரப்பு வாக்குமூலம்.!


Madurai Husband Kills New Married Wife due to Individual House Plan

திருமணம் நடந்த நாளில் இருந்து தனிகுடித்தனத்திற்கு வற்புறுத்திய மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம், புது எல்லீஸ் நகர் ஆர்.சி. சர்ச் பகுதியை சார்ந்தவர் சாந்தி. இவரது மகன் நாகவேல். நாகவேல் பெயிண்டராக பணியாற்றி வரும் நிலையில், அலங்காநல்லூர் அய்யங்கோட்டை பகுதியை சார்ந்த வெள்ளைச்சாமி - வள்ளி ஆகியோரின் மகள் சுதாவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார். 

திருமணம் முடிந்த சில நாட்களுக்கு உள்ளாகவே சுதா தனிக்குடித்தனம் செல்ல கணவரை வற்புறுத்திய நிலையில், நாகவேல் குடும்பத்துடன் சேர்ந்து வசிக்கலாம் என்று கண்டிப்புடன் தெரிவித்து இருக்கிறார். இதனால் கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

madurai

இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு நாகவேல் வீட்டிற்கு வந்த நிலையில், தனிகுடித்தன தகராறு மீண்டும் எழுந்துள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நாகவேல், சுதாவின் கழுத்தை இறுக்கி இருக்கிறார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட சுதா, சிறிது நேரத்திற்குள்ளாகவே பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆத்திரத்தில் நடந்த கொலையை உணர்ந்துகொண்ட நாகவேல், அங்குள்ள எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, நாகவேலின் வீட்டிற்கு சென்று சுதாவின் உடலை கைப்பற்றினர். 

madurai

சுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நாகவேல் கொலை தொடர்பாக வாக்குமூலம் அளித்துளளார். அந்த வாக்குமூலத்தில், "நான் குடும்பத்தில் மூத்தவன். இதனால் குடும்ப பொறுப்புகள் என்னிடத்தில் இருந்தது. அதனாலேயே திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தேன்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக எனக்கும் - சுதாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் தான் மனைவிக்கு என்னை விட 2 வயது அதிகம் என்ற விஷயம் தெரியவரும். இதனால் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும், மனைவியுடன் நல்லமுறையில் வாழ மனதை தேற்றினேன். 

madurai

திருமணம் நடைபெற்று முடிந்த நாளில் இருந்து சுதா தனிகுடித்தனத்திற்கு அழைத்தார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். இந்த நிலையில், சுதா யாரிடமோ அலைபேசியில் பேசி வந்த நிலையில், இதனை கண்டித்தேன். அவர் எனது பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து தனிகுடித்தன சண்டை நடந்து வந்தது. 

இதனால் அவரின் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டு, குடும்பத்தில் குழப்பமான சூழல் மற்றும் பிரச்சனை உருவானது. சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு இரவு வந்த நிலையில், 11 மணியளவில் மீண்டும் தனிகுடித்தன பிரச்சனை நடந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரின் கழுத்தை நெரித்தேன். ஆனால், உயிரிழந்துவிடுவார் என அதனை செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.