அடுத்தடுத்த மரணத்துடன் சேர்ந்த கொரோனா.. தாய் - மகள் விபரீத முடிவால் 2 பேர் பலி., 2 பேர் உயிர் ஊசல்.!

அடுத்தடுத்த மரணத்துடன் சேர்ந்த கொரோனா.. தாய் - மகள் விபரீத முடிவால் 2 பேர் பலி., 2 பேர் உயிர் ஊசல்.!


Madurai Family Members Suicide Attempt 2 Died 2 Admit Hospital On Treatment

மதுரை மாவட்டத்தில் உள்ள கல்மேடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி லட்சுமி (வயது 46). இவர்களுக்கு அனிதா, ஜோதிகா என்ற 23 வயதுடைய 2 மகள்களும், சிபிராஜ் என்ற 13 வயது மகனும் உள்ளனர். இவர்களில் அனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். 

ஜோதிகாவுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், அவர் தனது கணவர் வல்லரசு மற்றும் மகன் ரித்திஷ் (வயது 3) ஆகியோருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நாகராஜுக்கு தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஜோதிகா தந்து பெற்றோரின் வீட்டிற்கு மகனுடன் வந்து தந்தையை கவனித்து வந்துள்ளார். 

madurai

கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்னதாக நாகராஜனும் உயிரிழந்துவிட்ட நிலையில், மகள், கணவர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் லட்சுமி பெரும் மனவேதனைக்கு உள்ளாகி இருக்கிறார். ஜோதிகா தாயாருக்கு ஆறுதலாக வீட்டில் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஜோதிகாவுக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது. 

இதனையடுத்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், ஜோதிகாவுக்கு கொரோனா உறுதியானது. ஜோதிகா தனது தாயாரிடம் விஷயத்தை தெரிவிக்கவே, லட்சுமி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். மேலும், வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டால், அனைவருக்கும் வந்துவிடும் என அச்சப்பட்டுள்ளனர். 

மேலும், ஏற்கனவே நமது குடும்பத்தில் 2 பேரை இழந்துவிட்டோம் என தாயும், மகளும் வருத்தப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் குடும்பமே பாதிப்படைவதை காட்டிலும், குடும்பத்துடன் தற்கொலை செய்திடலாம் என ஜோதிகா தாயிடம் தெரிவித்துள்ளார். தாயும் - மகளும் எடுத்த முடிவின்படி, நேற்று இரவு ஜோதிகா, அவரின் தாய் லட்சுமி, தம்பி மற்றும் மகன் என 4 பேர் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றுள்ளனர்.

madurai

அப்போது, ஜோதிகா மற்றும் அவரின் தாய், 3 வயது சிறுவன் ரித்திஷ், சிபிராஜ் ஆகியோருக்கு சாணிப்பவுடரை குடிக்க கொடுத்துள்ளனர். ஜோதிகா மற்றும் அவரின் தாய் பூச்சி மருந்தை குடித்து, நால்வரும் அடுத்தடுத்து மயங்கியுள்ளனர். இன்று காலை நேரத்தில் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், சிலைமான் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்கையில், ஜோதிகா மற்றும் அவரின் மகன் ரித்திஷ் பிணமாக இருந்துள்ளனர். ஜோதிகாவின் தாய் லட்சுமி, தம்பி சிபிராஜ் ஆகியோர் மயங்கி இருந்துள்ளனர். இவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.