தமிழகம்

மதுரை மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் அனுமதி.! பரபரப்பு சம்பவம்.!

Summary:

Madurai district collector assistant corono test positive

மதுரை மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் பெரியளவில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைசரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 3,600-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டுமே அதிகம் இருந்துவந்த கொரோனா பாதிப்பு தற்போது தமிழகம் முழுவதும் வேகமா பரவ தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அவர்களின் நேரடி உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.


Advertisement