பாவம்..!! தனியாக வாழ்ந்துவந்த மனுஷன்..!!! இன்று அதிகாலை கேட்ட திடீர் சத்தம்.. சிலிண்டர் வெடித்து உயிரிழந்த சோகம்..



Madurai cylinder burst accident one dead

மதுரையில் இன்று அதிகாலை ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பாலரங்காபுரம் EE ரோடு ஒன்றாவது தெருவில் வசித்து வந்தவர் சரவணன். இவருக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார் சரவணன்.

இந்நிலையில் வீட்டில் அவர் மட்டும் இருந்த நிலையில், இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்த சமையல் சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த விப்பதில் சரவணன் சம்பவ இடத்தியலே உயிரிழந்தார். மேலும் அவரது வீடு முழுவதும் உருக்குலைந்து போனது.

அதேநேரத்தில் சிலின்டர் வெடித்ததில் சரவணனின் வீட்டிற்கு அருகே இருந்த திருமண மண்டபத்தின் ஒரு பக்க சுவர் மற்றும் மேற்கூரை சேதமடைந்தன. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இந்நிலையில் விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நடந்தது விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.