தமிழகம்

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா! ஆபத்தான நிலையில் மதுரை கொரோனா நோயாளி!

Summary:

Madurai corono patient in serious condition

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 12ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.மேலும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பலரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில் மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் எந்த வெளிநாடும் போகவில்லை. மேலும் வெளிமாநிலத்திற்கு கூட செல்லவில்லை. ஆனாலும் அவருக்கு கொரோனா பரவியுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறியுள்ளது. மேலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மதுரையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement