தமிழகம்

இன்ஸ்டா பழக்கம் பலாத்காரம்.. அதுக்கு தான் நீ., கல்யாணத்துக்கு என் மதம் தடுக்கும்.. காம காதலன்கள் பகீர்.! 

Summary:

இன்ஸ்டா பழக்கம் பலாத்காரம்.. அதுக்கு தான் நீ., கல்யாணத்துக்கு என் மதம் தடுக்கும்.. காம காதலன்கள் பகீர்.! 

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த 2 இளம்பெண்கள், இன்ஸ்டாகிராம் வாயிலாக பழகிய இளைஞர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக கூறி புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், மதுரை மாவட்டத்தில் உள்ள புதூரை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, 2 ஆம் வருடம் பயின்று வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சித்திரவேல் என்பவரின் மகன் கவிபாலனுடன் (வயது 23) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது பின்னாளில் காதலாக மாறியதால், இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் திருமண ஆசை கூறியவன் அத்துமீறி இருக்கிறான். 

இந்த நிலையில், இருவரின் காதல் விவகாரம் தெரியவந்தால் காதலனை திருமணம் செய்ய வேண்டும் என பெண் முயற்சியெடுக்க, கவிபாலானோ எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நீ என்னை மறந்துவிடு என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் கவிபாலனை கைது செய்தனர். 

இதனைப்போல, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண், மதுரையில் செயல்பட்டு வரும் பாத்திரக்கடையில் பணியாற்றி வருகிறார். இவர் முகநூல் செயலியை உபயோகம் செய்து வந்த நிலையில், அதன் மூலமாக முகமது பைசல் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நாளடைவில் காதலித்ததாக தெரியவரும் நிலையில், முகமது பெண்ணை பலாத்காரம் செய்து திருமணத்திற்கு மதத்தை காரணமாக கூறி கைவிட்டுள்ளான். இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் முகமது பைசல் கைது செய்யப்பட்டான். 


Advertisement