தமிழகம்

பருவ காதல் வயப்பட்ட மகளை குத்திக்கொன்ற தந்தை.. நடந்த பரபரப்பு சம்பவம்.. மதுரையில் ஆணவக்கொலை..!

Summary:

பருவ காதல் வயப்பட்ட மகளை குத்திக்கொன்ற தந்தை.. நடந்த பரபரப்பு சம்பவம்.. மதுரையில் ஆணவக்கொலை..!

பெற்ற மகளை மதுபோதையில் தந்தையே பீர் பாட்டிலால் குத்திய கொடூரம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் அருகாமையில் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் முரளி. இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மகள் 11ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், ஒருவரை காதலித்து வந்துள்ளார். 

இதுகுறித்து அறிந்த முரளி தனது மகளை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தந்தை கூறியதை கேட்காததால், ஆவேசமடைந்த முரளி பெற்ற மகள் என்றும் பாராமல் மதுபோதையில் ராஜேஸ்வரியை தாக்கியுள்ளார்.

மேலும், முரளி பீர் பாட்டிலால் அவரை சரமாரியாக குத்திய நிலையில், ராஜேஸ்வரி பலத்த காயமடைந்துள்ளார். இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பின் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிய வர, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்துள்ளனர்.


Advertisement