தேர்வு எழுதுவதற்கு முன்பே தோல்வி பயம்.. 12 ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை.!

தேர்வு எழுதுவதற்கு முன்பே தோல்வி பயம்.. 12 ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை.!


madhurai-boy-commited-suicide

தேர்வு பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், புல்லமத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்தநிலையில், பொதுத் தேர்வுக்காக மதுரை அவனியாபுரத்தில் உள்ள அவரது மாமா வீட்டில் மாணவர் தங்கியிருந்த நிலையில், இன்று காலை படித்துக்கொண்டிருந்த போது தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது இதனை கண்ட அவரது மாமா ராஜபாண்டி என்பவர் சஞ்சயை காப்பாற்ற முயன்ற போது, அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

madhurai

இதனையடுத்து இருவரையும் அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

அப்போது மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாணவரை அனுப்பி வைத்த நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சஞ்சை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.