"டாஸ்மார்க் மூடாம மதுவை எப்படி ஒழிப்பீங்க" முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய நெட்டிசன்..!!



M K Stalin twitter Post

முதலமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கேள்வி எழுப்பிய நெட்டிசன். முதல்வர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில்:-

"கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் அடியோடு அகற்றப்பட வேண்டும்! போதைப்பொருட்கள் பயன்பாடு எனும் சமூகத்தீமை களையப்படுவதை ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் உறுதிசெய்திட வேண்டும்!

பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர கவனம் செலுத்தி, குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதிசெய்திட வேண்டும்!

காவல் நிலைய மரணங்களே இருக்கக்கூடாது; எந்த வழக்கானாலும் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்!

தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைந்து வரும் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்கள் நடக்கும் முன்னரே அதைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை திகழவேண்டும்." என்று அதில் பதிவிட்டிருந்தார். 

அதற்க்கு கமெண்ட் செய்யும் விதமாக ஒருவர் "இதையெல்லாம் செய்யறது உங்க கட்சிக்காரன் தான் தலைவரே அவங்களை நிறுத்த சொன்னா தமிழ்நாட்டுல இதெல்லாம் இல்லாமலே போயிடும் எல்லாத்துக்கும் மேல டாஸ்மார்க் மூடாம மதுவை எப்படி தமிழ்நாட்டில் ஒழிப்பீங்க" என்று விளாசியுள்ளார்.