சென்னை: பாரம்பரிய உணவுத் திருவிழா., நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்..!!M K stalin begin food festival tomorrow in chennai

சென்னையில் உள்ள நந்தம்பாக்க  வர்த்தக மையத்தில் 'வேளாண் வணிக திருவிழா' என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற இருக்கின்றது. தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த வணிக திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நாளை காலை 10.30 மணியளவில் தொடங்கி வைக்க இருக்கிறார்.

மேலு, இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறும். அதிலும் குறிப்பாக பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவகங்கள் பங்கேற்க கூடிய உணவுத் திருவிழாவும் நடைபெறும். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அவர்களின் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த திருவிழாவில் உற்பத்தியாளர் மற்றும் கொள்முதலாளர் கலந்துரையாடல்கள், வல்லுனர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.  அதன் அடிப்படியில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்க இருக்கிறது.