
Lovers killed 8 years old boy near Tirupur
காதல் ஜோடி தனிமையில் இருந்தநிலையில் அதை பார்த்துவிட்ட சிறுவனை காதலர்கள் இருவரும் சேர்ந்து குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி பகுதியில் உள்ள குளம் ஒன்றில் 8 வயது சிறுவன் ஒருவன் மதுபாட்டிலால் குத்தி கொலைசெய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளான். சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு கொலை நடந்த இடத்தில் கைரேகை மற்றும் முக்கிய தடயங்களை கைப்பற்றினர்.
இதனை அடுத்து நடந்த விசாரணையில் அதே பகுதியையே சேர்ந்த பாலிடெக்னின்க் மாணவர் அஜித்(21) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அஜித்தும், அவரது காதலியும் சேர்ந்து சிறுவனை கொலை செய்தது அம்பலமானது.
கொலை குறித்து அஜித் கொடுத்த வாக்குமூலத்தில், தானும், சிறுவனின் வீட்டின் அருகே வசித்துவரும் 17 வயது பள்ளி மாணவியும் காதலித்து வருவதாகவும், இருவரும் குளத்தின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும், பின்னர் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும், இதனை அங்கு விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுவன் பார்த்துவிட்டதால் காதலியின் வீட்டில் சொல்லிவிட வாய்ப்பு இருப்பதால் அருகில் கிடந்த மதுபாட்டிலை உடைத்து சிறுவனை குத்தி கொலை செய்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பித்து சென்றதாகவும் போலீசார் விசாரணையில் கூறியுள்ளார்.
இதனை அடுத்து அஜித்தை கைது செய்த போலீசார் நீதிமாற்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அஜித்தின் காதலி மைனர் என்பதால் அவரை கோயம்பத்தூர் கூர்நோக்கு பள்ளியில் ஒப்படைத்தனர்.
தனிமையில் இருந்ததை பார்த்துவிட்ட சிறுவனை தங்கள் சுயநலத்துக்காக காதலன், காதலி இருவரும் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement