காதலியின் ஆசையை நிறைவேற்றிய காதலன்! கடைசியில் நிகழ்ந்த சோகம்!

Lovers accident


Lovers accident

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர்கள் மெர்சி. இவரும் அப்புவும் சிறுவயது முதல் ஒன்றாக பழகி வந்ததால் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அதனை தொடர்ந்து இவர்களின் காதலை அவர்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். பின்னர் அவர்களின் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் ஒரு நாள் மெர்சி தன் காதலுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது வெல்லஞ்சேரியில் உள்ள விளைநிலம் ஒன்றிற்கு இவரும் சென்றுள்ளனர். அப்போது மெர்சி அங்கு இந்த கிணற்றின் அருகே செல்பி எடுத்து கொள்ளலாம் என ஆசையாக கேட்டுள்ளார்.

chennai

அதற்கு அப்பு எனக்கு நீச்சல் தெரியாது என கூறியுள்ளார். அதெல்லாம் ஒன்றும் தப்பாக நடக்காது வா கூறி அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவரும் கிணற்றில் உள்ளே இருந்த படிக்கட்டின் வழியாக உள்ளே இறங்கியுள்ளனர். அப்போது மெர்சி கால் தடுக்கி முன் சென்ற அப்புவின் மேல் விழுந்துள்ளார்.

அதனை அடுத்து இருவரும் கிணற்றில் விழுந்துள்ளனர். அப்பு கிணற்றிலிருந்து கத்தியுள்ளார். அவ்வழியாக வந்த முதியவர் ஒருவர் டியூப் ஒன்றை போட்டார் அதை வைத்து மேலே வந்துள்ளார். அவர் முதியவரிடம் தனது காதலி உள்ளே இருக்கிறார் என கூறியுள்ளார். அதற்கு முதியவர் எனக்கு நீச்சல் தெரியாது என கூறி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அவர்கள் வந்து காப்பாற்றுவதற்குள் மெர்சி இறந்துள்ளார்.