காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்..! சுதாரித்த காதலர்கள் ..! நடந்தது என்ன..?lovers

சென்னை போரூர் காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 29). இவர், அதே பகுதியில் முடி திருத்தும் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர், வேலை செய்து வரும் அதே பகுதியில் உள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வரும் தரணி (வயது 23) என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில், ஆனந்த் என்பவர் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், முடி திருத்தும் வேலை செய்வதாலும், பெண்ணின் வீட்டார்கள் ஆனந்தை ஏற்க மறுத்ததோடு இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் வீட்டார்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சென்று, எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று காவலரிடம் தெரிவித்தனர்.

பின்னர் போலிசார், பெண் வீட்டாருக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் காவல் நிலையத்திற்க்கு விரைந்து வந்தனர். பிறகு அவர்களிடம், ஆனந்த் மற்றும் தரணி இவர்கள் இருவருக்கும் உங்களால் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று கூறி போலிஸார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.