தமிழகம்

தூங்கி கொண்டிருந்த காதலி வீட்டிற்குள் ஓடுகளை பிரித்து கொண்டு மண்ணெண்ணய் கேனுடன் குதித்த காதலன்.! பரிதாபமாக போன 3 உயிர்.!

Summary:

கோவத்தில் காதலன் செய்த செயலால், காதலி, காதலியின் தாயார் மற்றும் காதலன் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்டம்மா. இவருக்கு ரஜிதா என்ற மகள் உள்ளார். வெங்கட்டம்மாவின் கணவர் காலமான நிலையில், வெங்கட்டம்மா மற்றும் ரஜித்தா மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் ரஜிதாவை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தந்தை உயிரிழந்ததால், ரஜித்தாவுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்துள்ளது.

அரசு வேலை கிடைத்த பின்னர் ரஜித்தா காதலன் சதீஷை உதாசினப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது சதீஷ் கடும் கோபத்தில் இருந்த நிலையில், கடந்த மாதம் ரஜித்தாவுக்கு, மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. ரஜித்தா மீது கடும் கோபத்தில் இருந்த சதீஷ், ரஜித்தாவிடம் சண்டை போட்டுள்ளார்.

இந்தநிலையில், சதீஷ், நேற்று முன்தினம் அதிகாலையில் ரஜித்தாவின் வீட்டு ஓடுகளை பிரித்து, வீட்டிற்குள் மண்ணெண்ணய் கேனுடன் குதித்துள்ளார். வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த காதலி ரஜித்தா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார். அதனை தடுக்க வந்த தாயார் வெங்கட்டம்மா மீதும் தீ வைத்ததில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.

இந்த சம்பவத்தில் வெங்கடம்மா, ரஜிதா மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு துறை உதவியுடன் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்த போது, மூன்று சடலம் கிடந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement