தமிழகம்

திருமணத்திற்கு சம்மதம் சொன்ன பெற்றோர்கள்! காட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த காதல்ஜோடி! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Lover commits suicide after fixing marriage

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் சவுரிநாதன். கூலி தொழிலாளியான இவரது பிள்ளைகளில் ஒருவர் சோபியா. 21 வயது நிறைந்த அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பரதநாட்டியம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
சோபியாவின் வீட்டின் அருகே  அவர்களது உறவினரான  ராஜா என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாவின் மகன் ஆனந்தராஜும், சோபியாவும் காதலித்து வந்துள்ளனர். மேலும் தங்களது காதல் விவகாரம் குறித்து பெற்றோர்களிடமும் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, கொரோனா பிரச்சனை முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அரூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் ஆனந்தராஜூம், சோபியாவும் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவர்களது  அருகில் விஷபாட்டில் ஒன்றும் கிடந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற சிலர் ஆனந்த்ராஜ் மற்றும் சோபியாவின் சடலத்தை கண்டு, அலறியவாறே அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்ததும் இரு குடும்பத்தார்களும் கதறிதுடித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் காதலுக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைப்பதாக கூறிய நிலையிலும் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என தெரியாமல் இரு குடும்பத்தார்களும் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement