தமிழகம்

காருக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த இளம் காதல் ஜோடி! விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்.

Summary:

Love pair suicide in car set at salem

சேலத்தில் உள்ள செவாப்பேட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் கோபி. வெள்ளி வியாபாரியான இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். அந்த பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவரும் சுரேஷ் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அவர் பல இடங்களில் தேடியுள்ளனனர்.

இறுதியில் கோபிக்கு சொந்தமான கார் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் சுரேஷும், ஒரு இளம் பெண்ணும் நிர்வாணமான நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்குசென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த இளம் பெண், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வெள்ளி வியாபாரி ரவின் என்பவரின் மகள் ஜோதிகா என்பது தெரியவந்தது.

மேலும் சுரேஷ், ஜோதிகா இருவரும் காதலித்து வந்ததாகவும், அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு தற்கொலை செய்துகொண்டர்களா? அல்லது உல்லாசத்தின் போது மூச்சடைத்து இருவரும் இறந்து விட்டார்களா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் அவர்கள் எப்படி இறந்தனர் என்பது உறுதி செய்யப்படும் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement