எரிசாராயம் ஏற்றி வந்த லாரி கவிந்து விபத்து: பதறி ஓடிய தீயணைப்பு துறையினர்..!

எரிசாராயம் ஏற்றி வந்த லாரி கவிந்து விபத்து: பதறி ஓடிய தீயணைப்பு துறையினர்..!


lorry-loaded-with-liquor-overturned-in-an-accident-affe

கோயம்புத்தூர் அருகே எரி சாராயம் ஏற்றி சென்ற லாரி ஒன்று கவிழ்ந்த விபத்தில் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து, கோயம்புத்தூர் வழியாக கேரள மாநிலத்திற்கு எரி சாராயம் ஏற்றுக்கொண்டு நான்கு லாரிகள் என்று அதிகாலை 6:00 மணி அளவில் வந்து கொண்டிருந்தன.

இந்த லாரிகள்.  இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் எட்டிமடை கிராமத்திற்கு அருகே ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் திடீரென விபத்து ஏற்பட்டதால் ஒரு லாரி கவிழ்ந்தது ஒரு மற்றொரு லாரிக்கு லேசான சேதம் ஏற்பட்டது.

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற லாரியின் ஓட்டுநர்கள், எரி சாராயம் தீப்பற்றி விடுமோ என்கிற அச்சத்தில் இந்த விபத்து சம்பவம் குறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த விபத்தின் தீவிர தன்மையை உணர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரிகள் தீப்பிடித்து விடாமல் இருக்க தண்ணீரை பீச்சி அடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் ராட்சத கிரேன்கள் மூலமாக, கவிழ்ந்த லாரி தூக்கி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  விபத்து அதிகாலையில் நடைபெற்றதாலும் வெயில் இல்லாத காரணத்தாலும், எரி சாராயம் தீப்பற்றி கொள்ளாததால் அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கே.ஜி.சாவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.