தமிழகம்

குடிபோதையில் தாறுமாறாக லாரியை ஓட்டி வந்த நபர்! லாரியின் அடியில் சிக்கி பறிபோன உயிர்கள்! அதிர்ச்சி வீடியோ!

Summary:

lorry accident in Krishnagiri


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுங்கச்சாவடியில் நேற்று மதியம் வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அந்தசமயத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று அங்கிருந்த சுங்கசாவடியின் மீது மோதியது.

அப்போது சாலையை கடந்து கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது அந்த கன்டெய்னர் லாரி மோதியது. அந்த விபத்தில் சுகுமார் என்பவரின் மனைவி பிரமிளா மற்றும் முன்னாள் இராணுவ வீரரான சென்னப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த கவிதா என்ற இளம்பெண் படுகாயமடைந்தார். அந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். படுகாயமடைந்த கவிதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் சிவக்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் நடந்த போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், சிசிடிவியில் பதிவாகியிருந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement