தமிழகம்

உறுதியானது தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..! ஏப்ரல் 30 வரை நீட்டிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.

Summary:

Lock down extended up to April 30 in tamilnadu

தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவிலும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது.

அதேநேரம், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு பல மடங்கு உயர்ந்ததை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கை நீடிக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அணைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் வீடியோ கால் மூலம் உரையாற்றியதை அடுத்து நாளை காலை 10 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளார். பிரதமர் ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே தமிழகத்தில் இந்த மாத இறுதி வரை ஊரடங்கை நீடிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாத பொருட்கள் இலவசமாக வழங்கப்படும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Advertisement