தமிழகம்

மனசுல கொஞ்சம்கூட பயம் இல்ல..!! பேருந்தில் பயணியின் லேப்டாப் பையை திருடிச்செல்லும் நபர்...! சிசிடிவி காட்சி

Summary:

பேருந்தில் இருந்த பயணி ஒருவரின் லாப்டாப் பேக்கை நபர் ஒருவர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்

பேருந்தில் இருந்த பயணி ஒருவரின் லாப்டாப் பேக்கை நபர் ஒருவர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட தனியார் பேருந்தில் பயணி ஒருவர் லாப்டாப் பேக்குடன் ஏறியுள்ளார். பேருந்தில் ஏறிய அவர் தனது இருக்கைக்கு மேலே இருக்கும் பொருட்கள் வைக்கும் இடத்தில் தனது பையை வைத்துவிட்டு, தனது இருக்கையில் அமர்ந்துள்ளார்.

இதனை கவனித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர், குறிப்பிட்ட பயணியின் பின்னால் உள்ள இருக்கையில் அமர்வதுபோல் சென்று, அவரது லாப்டாப் பேக்கை லாவகமாக திருடிச்சென்றுள்ளான். பேருந்தில் கூட்டம் அதிகமாக இல்லாதால், திருடன் எந்த ஒரு பதற்றமும் இன்று லாப்டாப் பேக்கை திருடிச்சென்றுள்ளான்.

இந்த காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளநிலையில், போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.


Advertisement