தமிழகம்

கணவன் இறந்து சில மாதம் கூட ஆகல! அதுக்குள்ள மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்! கதறும் குழந்தைகள்!

Summary:

Lady died who put injection in medical shop

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்து கீழப்புலியூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன். டி.பார்ம் படித்துள்ள இவர், அதே பகுதியில் ஆங்கில மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மெடிக்கல் கடை நடத்திவரும் கதிரவன் காய்ச்சல், சளி என சிறு சிறு நோய்களுக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரை கொடுப்பதையும் செய்து வந்துள்ளார் .

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற 35 வயது பெண், சளி மற்றும் இருமல் பிரச்னையுடன் கதிரவனின் மெடிக்களுக்கு ஊசி போட சென்றுள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வியின் கை நரம்பில் கதிரவன் ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தமிழ்செல்வி சிறுதுநேரத்தில் மயங்கி விழுந்து அங்கையே உயிர் இழந்தார். இதுகுறித்து தமிழ்செல்வியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து மெடிக்கல் உரிமையாளர் கதிரவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதில் மேலும் சோகமான விஷயம் என்னவென்றால், தமிழ்ச்செல்வியின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தற்போது தமிழ்ச் செல்வியின் இறந்துவிட்டதால், அவரது பிள்ளைகள் ஆதரவற்று நிற்கின்றனர்.


Advertisement