முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும்.! எல்.முருகன்

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும்.! எல்.முருகன்



L murugan talk about cm

அரியலூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன் தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும் எனக் கூறினார். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பா.ஜ.க மேலிடம்தான் முடிவு செய்யும்எனக் கூறினார்.

l murugan

எனது தலைமையிலான வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஏற்கனவே தொடங்கி விட்டது என்று கூறினார். அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அறிவித்து, பிரச்சாரத்தையும் முதலமைச்சர் துவங்கி விட்டார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக கூறிவரும் பா.ஜ.க, முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.