தேர்தல்கள் வரும் போகும்.. ஆனால் கண்டிப்பாக இது நடக்க வேண்டும்.! மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து.!kushboo wishes to mk stalin

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்தநிலையில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், திமுகவின் வேட்பாளர் டாக்டர் எழிலனை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகை குஷ்பு  தோல்வியடைந்தார். இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அந்த பதிவில், "நாம் ஒற்றுமையோடு நிற்போம். அழகிய மாநிலமான தமிழ்நாட்டை இன்னும் சிறப்பானதாக்க வரப்போகும் புதிய அரசுக்கு உதவுவோம். திமுக மற்றும் அதன் தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தை தனது வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் முன்னெடுத்துச்ச்செல்வார் என்று நான் நம்புகிறேன். தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.