
ஊழல் பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தகுதி கிடையாது என்று குஷ்பு கூறியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. அரசு மீது தி.மு.க.சார்பில் இன்று கவர்னரிடம் ஊழல் பட்டியல் கொடுக்கப்பட்டது. இதனை பா.ஜ.க-வை சேர்ந்த நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஜனநாயகத்தில் விமர்சிக்கவும், கருத்துக்கள் சொல்லவும் எல்லோருக்கும் உரிமை உண்டு. அதேநேரம் மற்றவர்களை பற்றி குறைசொல்லும் முன் தன்னைப்பற்றியும் யோசித்து பார்க்க வேண்டும்.
ஊழல் பற்றி எந்த கட்சி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அந்த தகுதி கிடையாது. தி.மு.க. இதேபோல் கடந்த தேர்தல் நேரத்திலும் ஊழல் பட்டியல் கொடுத்தது. இந்த தேர்தல் நேரத்திலும் கொடுத்துள்ளது. ஓட்டு போட போவது மக்கள். அவர்கள்தான் இதற்கெல்லாம் பதில் சொல்வார்கள். நீங்கள் செய்ததை சொல்லுங்கள். அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை சொல்லுங்கள். ஆதரவு அளிப்பது பற்றி மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement