நடிகை குஷ்பூபோட்டியிடும் தொகுதி உறுதியானது.! எந்த தொகுதி தெரியுமா.?

நடிகை குஷ்பூபோட்டியிடும் தொகுதி உறுதியானது.! எந்த தொகுதி தெரியுமா.?



kushboo-contesting-from-ayiram-vilakku

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் பல கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக கூட்டணி இணைந்து சந்திக்கவுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக -விற்கு 20 தொகுதிகளை அதிமுக அறிவித்தது. இந்தநிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் அந்த 20 பேர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

kushboo

இந்நிலையில் 20 பேர் கொண்ட பட்டியல் டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என கூறப்பட்டது. பாஜகவை சேர்ந்த  நடிகை குஷ்பு அங்கு கடந்த மூன்று மாதங்களாக வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை அதிமுக தலைமை பாமகவுக்கு ஒதுக்கியது. இதனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை