4 பேரையும் சாகும் வரை ஜெயில்ல போடுங்க..! இளம் பெண் ரேப் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

4 பேரையும் சாகும் வரை ஜெயில்ல போடுங்க..! இளம் பெண் ரேப் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


kumbakonam-abuse-case-court-judgment

கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு தஞ்சாவூர் அருகே உள்ள கும்பகோணம் வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து கிளம்பி ரயில் மூலம் கும்பகோணம் வந்த அந்த பெண் இரவு 11 மணியளவில் கும்பகோணம் வந்துள்ளார்.

அதன்பிறகு ஒரு ஆட்டோவில் ஏறி தான் கூறும் வழியில் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுனரிடம் கூறியுள்ளார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் வேறு வழியில் சென்றதால் சந்தேகமடைந்த இளம் பெண் தனது நண்பர்களுக்கு போன் செய்ததால், பயந்துபோன அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை நடு ரோட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.

அதன்பிறகு 2 சக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் அந்த பெண் உதவி கேட்க, ஏற்கனவே வாகனத்தில் 2 பேர் இருந்தும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் சென்றுள்ளார். சிறிது தூரம் வாகனத்தில் சென்ற அந்த இளைஞர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது நண்பர்கள் இருவருக்கு போன் செய்து அவர்களையும் வரவைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளன்னர்.

Crime

இதன்பிறகு அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி, போகும் வழியில் ஒருவன் ஆட்டோ ஓட்டுனரின் தொலைபேசியை வாங்கி யாருக்கோ போன் செய்துள்ளான். பிறகு அந்த பெண்ணை ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளன்னர். ஆட்டோ பதிவு நம்பரை குறித்துவைத்த அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரை அடுத்து ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரித்ததில் அந்த தொலைபேசி மூலம் செய்யப்பட்ட அழைப்பை வைத்து கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் சுப்பிரமணியன் மகன் தினேஷ் (26), மோதிலால் தெரு மூர்த்தி மகன் வசந்த்குமார் (23), மூப்பனார் நகர் சிவாஜி மகன் புருஷோத்தமன் (21), ஹலிமா நகர் சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் (21) ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பில்,  5 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. மேலும், பலாத்காரம் செய்த நான்கு பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும் மேலும் தலா ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்து, ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.