நொடிப்பொழுதில் நடந்த சம்பவம்.. துடிதுடித்து உயிரிழந்த 6 பேர்.. கண்கலங்கவைக்கும் சோக சம்பவம்..

நொடிப்பொழுதில் நடந்த சம்பவம்.. துடிதுடித்து உயிரிழந்த 6 பேர்.. கண்கலங்கவைக்கும் சோக சம்பவம்..


Krishnakiri car accident 6 dead on spot

கிருஷ்ணகிரி அருகே நின்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த எட்டு பேர் பெங்களூரிலுள்ள ஒன்டர்லா சுற்றுலா தளத்திற்கு ஆம்னி கார் மூலம் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து தேவராஜ் என்பவர் கீழே இறங்கி, சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த ஆம்னி வேன் தேவராஜ் மீது மோதி, வேன் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற தேவராஜ் மற்றும் ஆம்னி வேன் ஓட்டுநர், காரில் பயணம் செய்த்தவர்கள் என மொத்தம் 6 பேர் சம்பவம் இடத்திலையே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கௌதம், பரணி, அசோக் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.