தமிழகம்

16 வயது சிறுமியுடன் காதல்., ஆணவத்தில் காதலியின் அண்ணனிடம் அரைகூவல்.. இரத்த வெள்ளத்தில் மிதந்த காதலன்..!

Summary:

16 வயது சிறுமியுடன் காதல்., ஆணவத்தில் காதலியின் அண்ணனிடம் அரைகூவல்.. இரத்த வெள்ளத்தில் மிதந்த காதலன்..!

தங்கையுடனான காதலை கைவிடமறுத்து, அடாவடியாக வம்பு செய்த வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், ராம் நகரை சேர்ந்தவர் தண்டாயுதம். இவரின் இரண்டாவது மகன் வினோத் குமார் (வயது 19). இவர் கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார். ஓசூரை அடுத்துள்ள வாசவி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். வினோத் குமார் - 16 வயது சிறுமி காதலித்து வந்ததாக தெரியவருகிறது. 

இந்த விஷயம் சிறுமியின் அண்ணன் சந்தோஷ் குமாருக்கு (வயது 18) தெரியவரவே, அவர் வினோத்தை அழைத்து கண்டித்து இருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வினோத் குமார், அவரின் நண்பர் சுல்தான் கட்டிட ஒப்பந்ததாரர் முருகேஷ் என்பவரின் வீட்டில் தங்க வாசவி நகருக்கு சென்றுள்ளனர். 

அப்போது, மதுபோதையில் இருந்த வினோத், தனது காதலியான சிறுமியின் அண்ணனுக்கு போனில் தொடர்பு கொண்டு, "உன் ஏரியாவுல தான் இருக்கேன், தைரியம் இருந்தால் நேரில் வா" என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் குமார் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில், வினோத் மற்றும் சுல்தானிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த வாக்குவாதமானது கைகலப்பாக மாறவே, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சந்தோஷ் குமார் மறைத்து வைத்திருந்த கத்திய எடுத்து வினோத் குமாரை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். வினோத்தின் நண்பர் சுல்தானுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரத்த ஓசூர் காவல் துறையினர், வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சந்தோஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement