500 கோடி பணம், நகை மோசடி; அமைச்சருடன் எடுத்துக்கொண்ட செல்பி தான் காரணமா?

kovai - erodu jwells owener escape- 500 crors


kovai - erodu jwells owener escape- 500 crors

கோயமுத்தூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் நகை கடை நடத்தி வந்துள்ளார் குறிஞ்சி நாதன் என்பவர். இவர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தன்னுடைய கடைகளில் பணம் முதலீடு செய்தால் ஒரே மாதத்தில் 30 சதவீதம் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளார்.

பல இடங்களில் நகை கடைகளை நடத்தி வந்ததாலும், அமைச்சர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை நம்பியும் அவரிடம் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் குறிஞ்சி நாதன் திடீரென 500 கோடி மதிப்புள்ள பணம் நகைகளுடன் மாயமாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்தனர்.