தமிழகம்

பேச மறுத்த காதலி! காதலன் செய்த கொடூர காரியம்! கோவையில் ஒரு திக் திக் சம்பவம்!

Summary:

Kerala girl attacked by lover in kovai for love issue

தனது காதலி தன்னிடம் பேச மறுத்ததால் வாலிபர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஆர்.எஸ் புறம் என்ற பகுதியில் கேரளாவை சேர்ந்த அமிர்த என்ற இளம் பெண் அங்கு தங்கி அருகில் உள்ள கணினி மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பயிற்சி முடிந்து வெளியே வந்த அமிர்தாவை சுரேஷ் என்றே இளைஞர் கத்தியால் சராமரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த இளைஞரை சுற்றிவளைத்து பிடித்ததோடு அந்த மாணவியை மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அந்த இளைஞரை விசாரித்ததில் சுரேஷ் என்ற அந்த இளைஞரும், அமிர்தாவும் கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஒன்றாக பிடித்ததாகவும், இருவரும் காதலித்துவந்த நிலையில் திடீரென அமிர்தா தனது காதலை நிராகரித்ததாலும், தன்னுடன் பேச மறுத்ததாலும் அந்த பெண்ணை கத்தியால் குத்தியதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.


Advertisement