அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி இன்று அதிகாலை திடீர் கைது!

அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி இன்று அதிகாலை திடீர் கைது!



kc palanichami arrested

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியில்  இருந்து நீக்கப்பட்டுள்ள அவர் அதிமுக பெயரில் இணையதளப் பக்கம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

அ.தி.மு.க.வில் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் கே.சி. பழனிசாமி.  நாமக்கல்லின் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற எம்.பி.யாக கடந்த 1989ம் ஆண்டு தேர்வானார்.  இதனைத்தொடர்ந்து காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.  

இந்தநிலையில், கே.சி.பழனிசாமி 2018ம் ஆண்டு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அதிமுக அறிவித்தது.

arrested

இந்தநிலையில் கோவை ஆர்எஸ்புரம் லாலி ரோட்டில் உள்ள கே.சி.பழனிசாமியின் வீட்டிற்கு இன்று காலை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சென்று அவரை கைது செய்து சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தான் தொடர்ந்து கட்சியில் நீடிப்பதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாகவும் பழனிசாமி மீது புகார் கூறப்பட்டுள்ளது.