முதல் இரண்டு குழந்தையும் மரணம்..! 35 வயதில் 3வது முறை கர்ப்பம்..! கர்ப்பப் பையின் வெளிசுவர் வரை பரவிய நஞ்சுக்கொடி.! போராடி காப்பாற்றிய கரூர் டாக்டர்கள்..!

முதல் இரண்டு குழந்தையும் மரணம்..! 35 வயதில் 3வது முறை கர்ப்பம்..! கர்ப்பப் பையின் வெளிசுவர் வரை பரவிய நஞ்சுக்கொடி.! போராடி காப்பாற்றிய கரூர் டாக்டர்கள்..!


karur-gmch-helps-woman-with-rare-placenta-condition-del

35 வயதில் 3வது முறை கர்ப்பமான பெண் நஞ்சுக்கொடி இரக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவர்கள் குழந்தையையும், தாயையும் பத்திரமாக மீட்ட சம்பவம் பாராட்டுகளை பெற்றுவருகிறது.

மேற்கு வங்காள மாநிலத்தை பூர்விக்கமாக கொண்டவர் 35 வயதாகும் பூனம்ராம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கரூர் மாவட்டத்திற்கு பிழைப்பு தேடி வந்துள்ளார். இதற்கு முன்னதாக மேற்குவங்கத்தில் இருந்தபோது இருக்கு முதல் பிரசவத்தில் குழந்தை பிறந்து, அந்த குழந்தை 3 நாட்களிலேயே உயிரிழந்தது. 2-வது முறை கருவுற்றபோது, கரு வயிற்றிலேயே கலைந்துள்ளது.

இப்படி முதல் இரண்டு குழந்தைகளையும் இழந்த பூனம்ராம் 35 வயதில் மூன்றாவது முறை கற்பமாகியுள்ளார். இந்நிலையில் பூனம்ராம் பிரசவத்திற்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால் அவருடைய நஞ்சுக்கொடி இறக்கம் அடைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடைய சிறுநீர்ப்பை கர்ப்பப்பையுடன் ஒட்டிய நிலையில் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வதில் மேலும் சிக்கல் எழுந்தது.

இதனை அடுத்து மகப்பேறு மற்றும் சிறுநீரகம் ஆகிய துறைகளில் கை தேர்ந்த மருத்துவர்களுடன் அறுவை சிகிச்சை தொடங்கிய, சிலர் மணி நேரங்களில் 1.28 கிலோ எடையுடைய ஆண் குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது குழந்தையும், தாயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்து  தாய் மற்றும் குழந்தையை மீட்ட அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.