அட கடவுளே!! மக்களை மிரட்டும் கருப்பு பூஞ்சை நோய்!! கருப்பு பூஞ்சை நோய் என்றால் என்ன தெரியுமா??



karuppu-poonjai-diseases-for-corona-patients

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் கருப்பு பூஞ்சை என்ற தொற்று தற்போது மக்களிடையே அதிகமாக பரவி பெரும் மேலும்  அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள்தோறும் பலலட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனால் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் கொரோனாவை தாண்டி, அடுத்ததாக கருப்பு பூஞ்சை என்ற தொற்று மக்களிடையே அதிகரித்து அச்சறுத்தி வருகிறது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள், கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவீனமான எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுகிறது. தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் இதுவரை 1000 பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 52 பேர் பலி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.