தமிழகம்

போக்ஸோ வழக்கில் சிறை.. வாழ்க்கையில் விரக்தியடைந்து கைதி எடுத்த முடிவால் விபரீதம்.!

Summary:

போக்ஸோ வழக்கில் சிறை.. வாழ்க்கையில் விரக்தியடைந்து கைதி எடுத்த முடிவால் விபரீதம்.!

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிறைக்கு சென்றவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் மாவட்டம், அடவிசோமபுரா கிராமத்தில் வசித்து வருபவர் ராஜி லமானி (வயது 19). இவர் சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் கதக் சிறையில் அடைக்கப்பட்டார். 

கடந்த 20 நாட்களாக சிறையில் இருந்த ராஜு லமானி, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சிறையில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் காலையில் கழிவறைக்கு சென்ற கைதிகள், ராஜீ தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இந்த தகவலை அறிந்த சிறைத்துறை அதிகாரிகள், ராஜு லமானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடந்து வருகிறது. மேலும், மாவட்ட தலைமை நீதிபதி நேரடி விசாரணை நடத்தி வருகிறார். 

இவர் தன்னுடன் கல்லூரியில் பி.யூ.சி பயின்று சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை கைவிட்ட நிலையில், இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போதுதான் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.


Advertisement