காதலிக்கிறியா?.. "அந்த இடத்தில் பச்சை குத்து" - சைக்கோ காதலனால் தன்னை காப்பாற்ற பெற்றோர் காலில் விழுந்து கதறிய கல்லூரி மாணவி.!Kanyakumari Marthandam Love Boy Torture Girl Force to add Tattoo on Breast

கல்லூரி மாணவியை காதலித்த இளைஞன் சைக்கோவாக மாறி, பெண்ணை தனது பெயரை மார்பில் பச்சை குத்தச்சொல்லி படுத்தியெடுத்த பயங்கரம் மார்த்தாண்டம் அருகே நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் 28 வயது இளைஞர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரின் பக்கத்து ஊரில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். மாணவிக்கும் - பூ வியாபாரிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. 

இதனையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதில், இளைஞன் பெண்ணை திட்டமிட்டு நயவஞ்சக காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். இதனால் கயவன் அழைக்கும் இடத்திற்கெல்லாம் பெண்மணி சென்றுவந்த நிலையில், நான் உயிர்வாழ்வதே உனக்குத்தான் என இளைஞன் கதையை அளந்துவிட்டு கம்பிகட்டி இருக்கிறான்.

kanyakumari

ஒருகட்டத்தில் இளைஞனின் சைக்கோத்தனம் வெளியாக, நீ என்னை காதலிக்கிறது உண்மை என்றால் மார்பில் எனது பெயரை பச்சை குதிகால் என்று வற்புறுத்தி இருக்கிறான். காதல் லீலை எல்லை மீறுவதை உணர்ந்து பதறிப்போன மாணவி, பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன மாணவியின் தந்தை, மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் இளைஞனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞனோ சைக்கோ போல பேசிக்கொண்டு இருப்பதால், அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசித்து வருகின்றனர்.