தோழிக்கு பாலியல் தொல்லை.. காமுகனை 4 கி.மீ விரட்டி சென்று பிடித்து நொறுக்கியெடுத்த நண்பர்கள்.!

தோழிக்கு பாலியல் தொல்லை.. காமுகனை 4 கி.மீ விரட்டி சென்று பிடித்து நொறுக்கியெடுத்த நண்பர்கள்.!


kanyakumari-girl-abuse-by-men

சக மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற நபரை, மாணவர்கள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு விரட்டி சென்று பிடித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் உணவகம் ஒன்றில் மாணவர்கள் சாப்பிட வந்துள்ளனர். அப்போது அந்த உணவகத்தில் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவியை, அருகிலிருந்தவர் சைகை காட்டி அழைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவி கைகழுவ சென்றபோது, அவரது பின்னால் நின்று தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது சக மாணவர்களிடம் இது குறித்து தெரிவித்த நிலையில், தட்டிக் கேட்க வந்த மாணவர்களையும் அந்த நபர் கடுமையாக தாக்கி விட்டு காரில் தப்பியுள்ளார்.

Kanyakumar

இருப்பினும், மாணவர்கள் விடாமல் அவரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்ற நிலையில், காரை மடக்கி கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர். பின் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் காரில் தப்பிக்க முயன்ற நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.