கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. பைக்கை முந்த முயன்றவர் தலை நசுங்கி பலி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..

இருசக்கர வாகனத்தில் சென்றவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்தபோது, லாரி ஒன்று அவரது தலையில் ஏறி இறங்கிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
குறிப்பிட்ட சம்பவமானது கன்யாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடந்துள்ளது. மாதவன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் நட்டாலம் பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, தனக்கு முன்னாள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை முந்திச்செல்ல முயன்றுள்ளார்.
இதில் மாதவனின் இருசக்கர வாகனம் முன்னாள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் உரசியதில், மாதவன் கீழே விழுந்தார். அப்போது எதிர் திசையில் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி, மாதவனின் தலையில் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மாதவன் சம்பவ இடத்திலையே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
முன்னால் சென்ற பைக்கை முந்த முயன்றதால் விபரீதம்..... லாரியின் சக்கரத்தில் சிக்கி பைக்கில் சென்ற நபர் உயிரிழப்பு..!#Kanyakumari | #Bike | #Accident | #Death pic.twitter.com/R4CpFkWbl3
— Polimer News (@polimernews) November 27, 2021