தமிழகம்

கன்னியாகுமரியில் பரபரப்பு... பேஸ்புக் மூலம் பழகி நகை,பணத்துடன் 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபர் கைது.!

Summary:

கன்னியாகுமரியில் பரபரப்பு... பேஸ்புக் மூலம் பழகி நகை,பணத்துடன் 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபர் கைது.!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முருகவேல் (30) என்பவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் என்ற பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

அதனையடுத்து முருகவேல் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அந்த சிறுமியை தனது ஊருக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது 16 வயது சிறுமி 28 பவுன் தங்க நகை மற்றும் ரூ 50 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் காணவில்லை யாரும் கடத்தி சென்றிருக்கலாம் என கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் சிறுமியின் பெற்றோர்.

அந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். அதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முருகவேல் என்பவருடன் சிறுமிக்கு பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.உடனே கடலூர் விரைந்துள்ளனர் போலீசார்.

அங்கு வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த முருகவேலையும் அவர் கடத்திச் சென்ற அந்த 16 வயது இளம்பெண்ணையும் போலீசார் மீட்டனர்.


Advertisement