பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட வாலிபர் அதிரடி கைது; வெளியான பரபரப்பு சம்பவம்.!

பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட வாலிபர் அதிரடி கைது; வெளியான பரபரப்பு சம்பவம்.!


kaniyakumari - jenis rajkumar - arrest

பிரதமர் நரேந்திரமோடியை தரக்குறைவாக பேசி வீடியோ பதிவை வெளியிட்ட கன்னியாகுமரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சாரல்வில்லை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனீஸ் ராஜகுமார். இவர் குவைத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கத்துவா பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வினை முன்னிட்டு இவர் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டார்.

அந்த வீடியோ பதிவில் பாஜக கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறாக பேசி இருந்தார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பொதுச் செயலாளர் சி.தங்கப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.