கொட்டி தீர்த்த கனமழை! மாமல்லபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் இடிந்து விழுந்தது!

கொட்டி தீர்த்த கனமழை! மாமல்லபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் இடிந்து விழுந்தது!



kangai kondan madabam damaged for rain

வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியதில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்தநிலையில் மாமல்லபுரத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் அதிகாலை வரையில் மழை கொட்டித் தீர்த்தது.

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் 63-வது திருத்தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கங்கை கொண்டான் மண்டபம் பேரூராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது.

kangai kondan

14-ம் நூற்றாண்டில் பராங்குச மன்னனால் கட்டப்பட்ட இந்த மண்டபத்தின் ஒரு பகுதி காலையில் பெய்த மழையால் இடிந்து விழுந்தது. மற்றொரு பகுதி விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. 

விரிசல் ஏற்பட்ட பகுதியை அகற்றி மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மண்டபத்தை ஆய்வு செய்தனர். மேலும், மண்டபத்தை பாதுகாப்பாக அகற்றி புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.