அரசியல் தமிழகம்

அதிமுக, திமுக ஒன்றும் சிங்கம், புலி அல்ல.! கொசுக்கள் தான்.. பரபரப்பை கிளப்பிய கமல்ஹாசன்.!

Summary:

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வே

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் கமல்ஹாசன் தினமும் தொகுதி மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். நேற்று பிரச்சாரத்தின்போது பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இங்குள்ள மக்களின் ஏழ்மை, கொடுமை, சாக்கடை, குப்பையை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

5 வருடத்தில் இரண்டு வாரம் மட்டுமே குத்தைகை எடுத்து, ஜூஸை உறிஞ்சிவிட்டு சக்கையை போட்டு போய்டுவாங்க, அதனால் தான் சாக்கடை ஓடுகிறது, உங்களை கொசுக்கள் கடிக்கிறதுஎன கூறியுள்ளார். அதிமுக, திமுக ஆகியவை புலி, சிங்கம் அல்ல கொசுக்கள்தான் என்பதால் விரல்களால் நசுக்க வேண்டும் என பேசினார்.


Advertisement