இரத்தத்தை பார்த்து மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம்.. பேய் ஓட்டிய பூசாரி.. மலைவாழ் மக்கள் உண்டி உறைவிடப்பள்ளியில் சம்பவம்.!

இரத்தத்தை பார்த்து மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம்.. பேய் ஓட்டிய பூசாரி.. மலைவாழ் மக்கள் உண்டி உறைவிடப்பள்ளியில் சம்பவம்.!



Kallakurichi Tribal Hostel Girl Students Want Basic Amenities

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை, கொட்டபுத்தூர் கிராமத்தில் மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் தங்கி பயின்று வரும் நிலையில், இவர்களின் உறைவிடப்பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு தனித்தனி கட்டிடம் இல்லாத காரணத்தால், வகுப்பறையிலேயே தங்கியிருந்து வருகின்றனர். மேலும், 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ள பள்ளி விடுதியில் விடுதி காப்பாளர், காவலாளி, அடிப்படை வசதிகள் என ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. 

முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறை கட்டிடம் பயன்பாட்டில் இல்லாததால், ஒரே நேரத்தில் 5 பேர் பயன்படுத்தும் வகையில் உள்ள கழிப்பறை கட்டிடத்தையே மாணவிகள் உபயோகம் செய்து வருகின்றனர். மேலும், தண்ணீர் வசதியும் இல்லாததால் அங்கு பெரும் சோகமே எஞ்சி இருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினத்தில் பள்ளியில் தங்கியிருந்த மாணவி மனஉளைச்சலால் பிளேடால் கையை அறுத்து தற்கொலை முயற்சித்துள்ளார்.

Kallakurichi

அவர் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்த நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு மாணவியும் மயங்கி இருக்கிறார். இன்று காலை கழிப்பறைக்கு செல்ல தண்ணீர் பிடிக்க தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது, அங்கு இருந்த இரத்தக்கறையை பார்த்த மாணவி பதறியபடி கீழே விழுந்துள்ளார். இதனால் மாணவிக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்ட, அதனைப்பார்த்த 2 மாணவிகளும் மயங்கி விழுந்துள்ளனர்.

இதனால் மாணவர்கள் எழுப்பிய அபயக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வர, மாணவிகள் எதையோ பார்த்து பயந்துவிட்டார்கள் என்று கூறி சாமியாரை வரவழைத்து திருநீர் வீசி பேய் ஓடிய சம்பவமும் நடந்துள்ளது. காலை 9 மணிக்கு மேல் வந்த ஆசிரியர்கள் மாவடிபட்டு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு 4 மாணவிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.