மழை பெய்கையில் சோகம்.. மின்னல் தாக்கி 40 வயது பெண் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!Kallakurichi Thiruvenneynallur Woman Lightening Attack Woman Died

மின்னல் தாக்கியதில் 40 வயது பெண்மணி பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் வட்டம், கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் பாஞ்சாலன். இவரின் மனைவி நிர்மலா (வயது 40). இவர் இன்று மதியம் தோட்டத்தில் வேலைகளை கவனித்து வந்துள்ளார். 

அப்போது, திடீரென மழை பெய்த நிலையில், எதிர்பாராத விதமாக மின்னல் தாக்குதலில் சிக்கி நிர்மலா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை காலங்களில் உயர்ந்த நிலங்களில், மரங்களுக்கு அடியில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.