கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம்... தனியார் பள்ளி முதல்வர், ஆசிரியர், தாளாளர் உட்பட 5 பேர் கைது...



Kallakurichi private school headmaster, teacher including 5 members arrested

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் பூகம்பமான நிலையில் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது. அதில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இந்த போராட்டம் தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 108 பேர் கள்ளக்குறிச்சி சிறார் சிறப்பு நீதிமன்றம், கள்ளக்குறிச்சி 2 ஆம் எண் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

Kallakurichi

மேலும் தனியார் பள்ளி முதல்வர், தாளாளர் மற்றும் செயலாளர் ஆகிய மூன்று பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியர் ஹரி பிரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். 

அந்த ஐந்து பேரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை ஆகஸ்ட் 1 தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்பொழுது ஐந்து பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.