காதலியுடன் ஊர் ஜாலியாக சுற்ற... சொந்தக்கடையில் 120 சவரன் கைவரிசை... ட்ராக் செய்து ரிவீட் அடித்த போலீஸ்.!

காதலியுடன் ஊர் ஜாலியாக சுற்ற... சொந்தக்கடையில் 120 சவரன் கைவரிசை... ட்ராக் செய்து ரிவீட் அடித்த போலீஸ்.!



jewelery-shop-owner-who-sole-jewels-and-money-from-his

காதலியுடன் ஊர்  சுற்றுவதற்காக சொந்தக் கடையிலேயே  நகை மற்றும் பணத்தை திருடிய  வடநாட்டைச் சார்ந்த இளைஞரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ஓட்டேரி பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ஜெயின். இவருக்கு நரேந்திர ஜெயின் மற்றும் யோகேஷ் ஜெயின் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மூன்று சகோதரர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் இணைந்து சென்னை சவுகார்பேட்டையில்  ஆரியன் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகின்றனர். வட நாட்டைச் சார்ந்த இவர்கள் தொழில் நிமித்தமாக சென்னையிலேயே குடியேறி வசித்து வருகின்றனர்.

tamilnadu

இந்நிலையில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி  வினோத் ஜெயின் காலையில் சென்று தனது கடையை திறந்த போது அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அவர் கடையில் வைத்திருந்த ஒரு கிலோ தங்கம் மற்றும்  15 லட்ச ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு  பதற்றம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவருக்கு தனது குடும்பத்தினர் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது வினோத் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அவரது சகோதரரான யோகேஷ் ஜெயின் கடையிலிருந்து ஒரு கிலோ தங்கம் மற்றும் பணத்தை திருடி சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ட்ராக் செய்து பார்த்ததில் அவர் தனது காதலியுடன் பெங்களூரில் இருப்பது  தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு சென்ற காவல்துறையினர்  னயோகேஷ் ஜெயினை  பிடித்து சென்னை அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தான் திருமணமான பெண் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் சந்தோஷமாக இருப்பதற்கு நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து தங்கம் மற்றும் 3 லட்ச ரூபாய் மீட்கப்பட்டது.