அரசியல் தமிழகம்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடக்க இதுதான் காரணம்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Summary:

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக செயல்பட்டவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக செயல்பட்டவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரில் கே.சி.வீரமணி வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

வேலூர் மாவட்டத்திலுள்ள முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திவரும் ரெய்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணி செய்ய விடாமல் அதிமுகவை தடுக்க ரெய்டு நடத்தப்படுகிறது. 

எனவே, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதாக பார்க்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் அதிமுகவினரை பணி செய்யவிடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Advertisement