தமிழகத்தின் தலைசிறந்த ஜல்லிக்கட்டு காளை திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு பிரியர்கள்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் விளையாட்டு

தமிழகத்தின் தலைசிறந்த ஜல்லிக்கட்டு காளை திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு பிரியர்கள்!

ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகரன் அவர்களின் பெரிய செவலை காளை  உடல் நல குறைவால் இறைவனடி சேர்ந்தது. PR அவர்களின் பெரிய செவலை காளைக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழகத்தின் பட்டி தொட்டியை கலக்கிய ஜல்லிக்கட்டு காளைதான் செவலை. இந்த பெரிய செவலை காளை களத்தில் இறங்கினால் மாடுபிடி வீரர்கள் அனைவரும் சற்று பின்வாங்கி ஒதுங்கி நிற்பார்கள். அந்த காளையின் பார்வையே சிங்க பார்வையாக இருக்கும். போட்டின்னு வந்துட்டா ஜெயிச்சுட்டுதான் வீட்டுக்கு திரும்புவான் அந்த செவலை.

அலங்காநல்லூர், புதுக்கோட்டை, தென்னலூர், பாலமேடு, சூரியூர் போன்ற புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசை தட்டி சென்று வாங்கி வந்துவிடுவான் புகழ்பெற்ற செவலை. திடீரென இந்த செவலை காளைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

 தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை, தனது வீட்டின் ஒரு உறுப்பினராகவே கருதி, சிறப்பாக கவனித்து வருவார்கள். அவர்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ. ஆனால் காளைக்கு சாப்பாடு வைக்காமல் தூங்கமாட்டார்கள் காளையின் உரிமையாளர்கள்.

ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகரன் அவர்களின் பெரிய செவலை காளை  உடல் நல குறைவால் இறைவனடி சேர்ந்ததை அடுத்து, தமிழகத்தின் அனைத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo