தமிழகம் இந்தியா விளையாட்டு

உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு காளை மரணம்! கண்ணீர் சிந்தும் வீர தமிழர்கள்!

Summary:

jallikattu bull died

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் தனக்கென இடத்தை தக்க வைத்த காளைகள் ஏராளம் உள்ளது. அந்த வகையில் தனக்கென ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைவரையும் மனம் கவர்ந்த காளை தான் சாம்பிராணிப்பட்டி கோவில் காளை.

சாம்பிராணிப்பட்டி கோவில் காளை எளிதாக வாடி வாசலை விட்டு வெளியேறியது கிடையாது. ஜல்லிக்கட்டு வர்ணனையாளர், மாட்டு காரன் வந்து மாட்டை பிடிச்சு கொண்டுப்போபா. என்று தான் ஒவ்வொரு ஜல்லிக்கட்டில் கூறி இருக்கின்றனர் அப்படி பட்ட காளை தான் சாம்பிராணிப்பட்டி கோவில் காளை.

மதுரை அழகர் கோவிலில் இருந்து கொஞ்சம் தூரம் பயணம் செய்தால் சாம்புராணிப்பட்டி ஊர் உள்ளது. அரியமலையில் இருக்கும் கருப்பன்ன சாமி கோவிலுக்கு நேர்திக்கடனாக நேந்து விடப்பட்ட காளை தான் இந்த சாம்பிராணிப்பட்டி கோவில் காளை.

சாம்பிராணிப்பட்டி கோவில் காளை வாடியில் இருந்து வெளியே வந்தாலே தெய்வத்தை நேரில் பார்த்தாற்போல அனைவருக்கும் மெய்சிலிர்க்கும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புல்லட் பைக் வாங்கி ஊருக்கு பெருமை சேர்த்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சாம்பிராணிபட்டி காளை இன்று இயற்கை மரணம் அடைந்தது.

ஜல்லிக்கட்டு வீரர்கள் இந்த சாம்பிராணிப்பட்டி கோவில் காளையை தொட்டாலே பெரிய விஷயமாக கருதுவார்கள். இந்த சாம்பிராணிப்பட்டி கோவில் காளையின் ஆட்டத்தை வீடியோவில் பார்த்தாலே உடல் சிலிர்த்து, நமக்குள் ஒரு வீரம் வரும். தமிழக ஜல்லிக்கட்டு வீரர்ககள், ரசிகர்கள் சாம்பிராணிப்பட்டி கோவில் காளையின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement