உதயநிதி ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.! கடும் கொந்தளிப்பில் ஜெய்ஆனந்த் திவாகரன்.!

உதயநிதி ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.! கடும் கொந்தளிப்பில் ஜெய்ஆனந்த் திவாகரன்.!


jaianandh talk about udhayanithi

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த, 5ம் தேதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, சசிகலாவை அநாகரிகமாகவும், இழிவாகவும் பேசியுள்ளார்.

அவரது பேச்சுக்கு, தற்போது கடும் கண்டனம் எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றதைப் பற்றி உதயநிதி பேசியதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

sasikala

இந்த நிலையில், சசிகலா குறித்து அவதூறாகப் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு திவாகரன் மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞரணி செயலாளருமான ஜெய் ஆனந்த் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், உதயநிதி ஸ்டாலின் சசிகலா குறித்து அவதூறாக பேசியதை சுட்டிக் காட்டியுள்ள ஜெய் ஆனந்த், உதயநிதி ஸ்டாலின் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.